முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி மாறி வாக்களித்ததாக ஆதித்ய தாக்கரே மீது புகார் : பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் ஆலோசனை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Aditya-Thackeray 2022-07-04

Source: provided

மும்பை : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது.

மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.  

இந்தநிலையில் சிவசேனாவின் 55 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் ஷிண்டே அணியில் உள்ளனர். அதேசமயம் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த கொறடா பாரத் கோகவாலே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொறடாவின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் வாக்களிக்கும் எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வாய்ப்புண்டு. இதனை பயன்படுத்தி சிவசேனா கொறடா பாரத் கோகவாலே சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்து போன உத்தவ் தாக்கரே அணியில் சிலர் நேற்று ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனினும் அவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியாகவில்லை.

சிவசேனா கொறடாவின் புகாரையடுத்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏகளுக்கு விளக்கம் கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகர் நோட்டீஸ் அனுப்புவார் எனத் தெரிகிறது. பின்னர் அவர்கள் அளிக்கும் பதிலுக்குப் பிறகு அவர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து