முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் ராஜினாமா

புதன்கிழமை, 6 ஜூலை 2022      இந்தியா
Mukhtar-Abbas 2022-07-06

Source: provided

புதுடெல்லி : மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். 

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் யாக முக்தார் அப்பாஸ் நக்வி இருந்துவந்தார். அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 7-ம் தேதி) முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து உள்ளார். 

துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்பட பல முக்கிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. 

பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. முக்தார் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!