முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவரை கரம் பிடித்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்ப்பு

வியாழக்கிழமை, 7 ஜூலை 2022      இந்தியா
Bhagwant-Mann-2022-07-07

சண்டிகரில் மருத்துவர் குர்பிரீத் சிங்கை (32) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் (48) நேற்று திருமணம் செய்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் திருமணம் மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனர்.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகவந்த் மானுக்கு ஆதரவாக அவரின் மனைவி இந்தர்பிரீத் கெளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். எனினும், அடுத்த ஆண்டிலேயே அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்தர்பிரீத் கௌர் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மருத்துவர் குர்பிரீத் சிங்கை சண்டிகர் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் பகவந்த் மான் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்பில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் மூத்த தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து