முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி பல்கலை. துணைவேந்தர் குர்மித்சிங்கிற்கு, காந்தி கிராம பல்கலை. துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு

சனிக்கிழமை, 9 ஜூலை 2022      இந்தியா
Gurmit-Singh 2022-07-09

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மித்சிங்குக்கு, காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தராக பணியில் இருந்த மாதேஸ்வரன் பணி விலக்கியதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக ரெங்கநாதன் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஓராண்டாக இவர் பொறுப்பு துணைவேந்தராக பணிபுரிந்துவந்த நிலையில், திடீரென ரெங்கநாதனை பணி விலகச் செய்து விட்டு, புதுச்சேரி பல்கலை துணைவேந்தராக உள்ள குர்மித்சிங் கிற்கு கூடுதல் பொறுப்பாக காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவியை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக இருந்த ரெங்கநாதன் உடனடியாக பொறுப்பு துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மித்சிங் காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பை வரும் செவ்வாய்கிழமை ஏற்பார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து