முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் களமிறங்கிய ஏவிஎம்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Arun-Vijay 2022 07-11

Source: provided

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் தமிழ் ராக்கர்ஸ். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிக்க ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த தொடரில் வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது இத்தொடர், அந்த அதிகாரி பெரும் பட்ஜெட்டில் உருவான ஒரு நடிகரின் படத்தை, இணையத்தில் வெளியிடப்படுவதை தடுத்து, அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இத் தொடர் வெளிப்படுத்துகிறது. தொடர் பற்றி இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனிலைவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறினார். ஏவிஎம் புரடக்சன்ஸ்  தயாரிப்பாளர் அருணா குகன் கூறியதாவது..  இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது. இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாக காட்சிப்படுத்த முடிந்துள்ளது. அருண் விஜய் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப்பெரும் பலத்தை தந்ததுள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து