முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் லிங்குசாமியின் தி வாரியர்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Lingusamy 2022 07-11

Source: provided

என். லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் தி வாரியர். Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரிக்க பவன் குமார் இப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும், ஆதி வில்லனாக நடித்துள்ளனர்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், படம் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தில் ஆதி சிறப்பாக பணியாற்றி இருக்கிறார், இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். சண்டக்கோழி, பையா நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் வாரியர் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி, சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர். இந்தப் படத்தை ஆதரித்த சிம்பு, சூர்யா, ‘புல்லட்’ பாடலை வெளியிட்ட உதயநிதி உள்ளிட்ட அனைவரும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து