முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யா வெளியிடும் சாய் பல்லவி படம்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Sai-Pallavi 2022 07-11

Source: provided

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் திரைப்படம் கார்கி. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்சியில் சாய் பல்லவி பேசுகையில், பொதுவாக இயக்குனர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே பணியாற்றினார். படத்தில் வேலை செய்தவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல் படத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறார்கள். ஒரு நாள் எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. ஏனென்றால், நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து