முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்னிக்குட்டி விமர்சனம்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Yogi-Babu 2022 07-11

Source: provided

லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் அனுசரண் இயக்கத்தில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் பன்னிக்குட்டி. படத்தில் கருணாகரன் , லக்ஷ்மி பிரியா, யோகி பாபு, லியோனி, ஷாதிகா, சிங்கம் புலி, தங்கதுரை, ராமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி முருகையாவின் கதைக்கு  அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து , அனுசரண் படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் இது. கதை, வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் சந்திக்கும் இளைஞன் கருணாகரன், அவர் சென்ற பைக் பன்னிக்குட்டி மீது மோதி விடுகிறது.  அது கெட்ட சகுனம் என்பதால் சாமியார் சொற்படி பரிகாரம் பெற மீண்டும்  மோதுவதற்காக அதே பன்னிக்குட்டியைத் தேடுகிறான் . ஆனால் அந்த பன்னிக்குட்டி மீது தூசு படமால் பத்திரமாக வளர்க்கிறான் யோகிபாபு. இடையில் பன்றிக் காய்ச்சல் ஊருக்குள் பரவ ஒரே பரபர காட்சிகள்.. கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் மிதிக்கதை. அருமையான கிராமிய லொக்கேஷன் , ஆங்காங்கே சில காமெடிகள் . வித்தியாசமான் கதை. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த பன்னிக்குட்டி கன்றுக்குட்டியாக மாறி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து