முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 22 ல் வெளியாகும் தனுஷின் தி க்ரே மேன்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Dhanush 2022 07-11

Source: provided

உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கட்டிப்போட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர்களான அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ஜூலை 22 ல் வெளியாக உள்ளது. ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். தி கிரே மேன் படத்தின் அனுபவம் பற்றிப் பேசிய தனுஷ், இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸ் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று கூறினார். இது குறித்துப் பேசிய இயக்குனர்கள். எங்களின் புதிய படமான ‘தி கிரே மேன்’ படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி யடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா, விரைவில் சந்திப்போம். என கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து