முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய விதிகள் உருவாக்கம்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு யார் யாரெல்லாம் போட்டியிடலாம் ?

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      அரசியல்
ADMK 2022 07-11

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட முடியும் என்பது தொடர்பாக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முழு விவரம்., 

  • * பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
  • * இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • * தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளின் பணியாற்றி இருக்க வேண்டும்.
  • * போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
  • * மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்.
  • * இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்.
  • * துணைச் பொதுச் செயலாளரை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

அ.தி.மு.க.வில் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட விதி எண் 20 ரத்து செய்யப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது. துணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து