முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவன் இவன் படம் மூலம் அறிமுகமான பிரபல குணசித்திர நடிகர் ராமராஜன் மரணம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022      சினிமா
Ramarajan 2022 07-12

Source: provided

சென்னை : அவன் இவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குணசித்திர நடிகர் ராமராஜன் மரணம் அடைந்தார். 

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த அவன் இவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமராஜன். இந்த படத்தில் யாரும் திருடக்கூடாது என்று கிடா வெட்டி விருந்து வைத்து சத்தியம் வாங்கும் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து தகடு, சவரிக்காடு உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுக்கு பின் சினிமாவில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராமராஜனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமராஜன் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 72. சொந்த ஊரான முதுகுளத்தூரில் ராமராஜன் உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்தன. மறைந்த ராமராஜனுக்கு மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து