முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      சினிமா
GARGI

Source: provided

சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் கார்கி.  சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வழங்க சக்தி பிலிம் பேக்டரி தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது கதை, ஒன்பது வயது சிறுமியை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார்.  இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. பின்பு சட்ட போராட்டங்களின் மூலம் சாய் பல்லவி தனது அப்பாவை காப்பாற்றினாரா? இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே படத்தின் கிளைமாக்ஸ். சாய் பல்லவி ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். அவரின் எதார்த்த நடிப்பு நம்மை கதையினுள் இழுத்து விடுகிறது. தனது அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக பல இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார்.  வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் ஒரு சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஆர் எஸ் சிவாஜி, சரவணன்,ஜெயபிரகாஷ் போன்றோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.  நீதிக்காக போராடும் ஒரு சாதாரண ஆசிரியரின் கதையை தத்ரூபமாக நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் ராஜேந்திரன்.  முக்கியமாக கோர்ட் ரூமில் நடக்கும் சீன்கள் அனைத்தும் பிரமாதம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை அருமை. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய பலம். மொத்ததில் சிறந்த பட வரிசையில் இடம் பெறுகிறது இந்த கார்கி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து