முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவின் நிழல் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      சினிமா
IRAVIN-NIZHAL

Source: provided

ஒத்த செருப்பு  திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை ஒரு சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறார் பார்த்திபன். கதை, சமூதாயத்தில் அனாதையாக விடப்பட்ட ஒருவனின் பசி,  அதனால் உருவாகும் பிரச்சனைகள், அவனின் இன்னொரு பக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படமே இந்த இரவின் நிழல் படம். 50 வயது கொண்ட ஒரு ஆனின் பல்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை Non linear  முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். 94 நிமிடம் 36 நொடிகள் ஒரே ஷாட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடை மாற்றுவது, அடுத்த காட்சிக்கு தயாராவது என பல்வேறு சவால்களை கடந்து இச்சாதனையை புரிந்துள்ளார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். படத்தில் பெரும்பாலும் பார்த்திபன் பேசிக் கொண்டே இருக்கிறார். இப்படத்தில் இடைவேளை இல்லை என்பதால், இதன் உருவாக்கத்தை முதல் பாதியாகவும், சிங்கிள் டேக்கை இரண்டாம் பகுதியாகவும் கொடுத்துள்ளார் இயக்குனர். ஒரே ஷார்ட்டில் படத்தை எடுத்திருக்கும் அவரின் முயற்சிக்கு 350 தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. பார்த்திபனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பேருதவி புரிந்துள்ளது. தொழில் நுட்பத்தில் கடும் சிரத்தை எடுத்து உச்சத்தை தொட்ட பார்த்திபன் திரைக்கதையிலும் கொஞ்ச கவனம் செலுத்தி இருந்தால் இரவின் நிழல் நிச்சயம் வானத்தைத் தொட்டிருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து