முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 20,528 பேருக்கு கொரோனா தொற்று : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நேற்று புதிதாக 20,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,50,599 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,709 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,790 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,81,441 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,43,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,99,98,89,097 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,59,840 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,92,569 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 86,94,25,632 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து