முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிபாரதி இயக்கும் பேட்டரி

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Manibharati 2022 07-18

Source: provided

2K கிட்ஸ்களை படம் பார்க்க வைப்பது கடினமாக இருக்கிறது என நடிகர் சூரி கூறியுள்ளார். எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் எனவும் நகைச்சுவையாக பேசியுள்ளார். இயக்குனர்கள் சரண், லிங்குசாமி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பத்திரிகையாளர் மணிபாரதி பேட்டரி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் நடிக்க அம்மு அமிராமி நாயகியாக நடித்துள்ளார்.  அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், மோகன் ராஜா, சரண், நடிகர் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சூரி, எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை மொபைல் எடுத்து பார்த்துக் கொண்டே திரைப்படத்தை பார்க்கின்றார்கள்.  அவர்களை திரைப்படம் பார்க்க வைப்பது கடினமாக உள்ளது என தெரிவித்தார். ஆனால் பேட்டரி திரைப்படத்தின் கதை கேட்டறிந்தேன்.  அந்தப் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து