முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்ரா இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Cobra-Music 2022 07-18

Source: provided

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, படத்தை  எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, விழாவில் பேசிய விக்ரம், சினிமாதான் என் உயிர். பல ஆண்டுகளுக்கு முன்பு டீ விளம்பரம் ஒன்றில் சோழ ராஜாவாக நடித்தேன். அதற்கு திலீப் என்ற இளைஞர் இசை அமைத்தார். இன்று ஆதித்ய கரிகாலனாக பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நான் நடித்துள்ளேன். அப்போது திலீப்பாக இருந்தவர், இப்போது ஏ.ஆர்.ரஹ்மானாக மாறி இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ளார் என்றார். நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளேன். நமக்குள் ஒரு கனவும், லட்சியமும் இருந்து கடினமாக உழைத்தால் மிகப்பெரிய உயரத்தை அடையலாம் என்றார். நான் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகன். ‘கோப்ரா’ படத்துக்கு அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார். படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. இந்தப் படத்தில் எனக்கு 7 தோற்றங்கள் என்பதால், டப்பிங் பேசுவதில் வித்தியாசம் காட்டியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து