முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைடியர் பூதம் விமர்சனம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Midair-Goblin-Review 2022 0

Source: provided

அபிஷேக் ஃபிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக மொட்டை போட்டு இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன், அஷ்வந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கதை வேற்று உலகத்தில் பிரபுதேவாவும் அவரது மகனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு தவம் இருக்கும் ஒரு முனிவரை தவறுதலாக தேவாவின் மகன் எழுப்பி விடுகிறார்.. இதனால் கோபம் அடைந்த முனிவர் பிரபுதேவாவிற்கு சாபம் கொடுத்து, உன்னை விடுவிக்க ஒரு மந்திரத்தை கூற வேண்டும் என்று சொல்லி அவரை பூமிக்கு அனுப்பி விடுகிறார். பின்னர் பூமியில் அஸ்வந்த் கையில் பிரபு தேவா கிடைக்கிறார்.  ஆனால் அஸ்வந்திற்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது. இறுதியில் அவர் அந்த மந்திரத்தை சொல்லி பிரபுதேவாவை விடுவித்தாரா? பிரபுதேவா மகனுடன் சேர்ந்தாரா? என்பது தான் இப் படத்தின் கதை. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட படமாக உள்ளது மை டியர் பூதம். இயக்குனரின் பேச்சுக்கு கொஞ்சம் கூட மறுப்பு தெரிவிக்காமல் அவர் சொன்னதை எல்லாம் செய்திருக்கிறார் பிரபுதேவா. அஸ்வந்த் திக்குவாய் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் குழந்தைகள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து