முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி வாரியர் விமர்சனம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
The-Warrior-Review 2022 07-

Source: provided

3 வருட இடைவேளைக்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘தி வாரியர்’. தெலுங்கு முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். கதை, மதுரையில் பிரபல ரெளடி ஆதியின் ஆட்கள், நடுரோட்டில் வைத்து ஒருவரை வெட்டிச் சென்று விட, அவரை டாக்டரான  ராம் பொத்தினேனி காப்பாற்றுகிறார். ஆனால் குருவின் ஆட்கள் மருத்துவனைக்குள் வைத்தே அவரை கொன்று விட, டாக்டர் தொழிலை விட்டுவிட்டு, போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ஏன் மாறினார்? என்பதற்கான விடைதான் தி வாரியர் படத்தின் கதை.தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்ற 15 வருட கனவு இந்தப்படம் மூலமாக  ராம் பொத்தினேனிக்கு நிறைவேறி இருக்கிறது. முதல் பாதியில் சாஃப்ட்டான டாக்டராக வரும் ராமுக்கு, இராண்டாம் பாதியில் போலீஸ் வேடம். கன கச்சிதம். பாராட்டுக்கள். கீர்த்தி ஷெட்டியின் காதலும், கியூட்னஸூம் கொஞ்சம் ஆறுதல். படத்திற்கு சப்போர்ட்டாக நிற்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புல்லட் சாங், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. லிங்குசாமியின் படங்களின் ஆகப் பெரும் பலம் ஆக்‌ஷனும் எமோஷனுமே. ஆனால் இரண்டுமே இதில் இல்லை. வில்லனாக வரும் ஆதியின் கதாபாத்திரத்திலும் அழுத்தம் இல்லை. மொத்தத்தில் தி வாரியர்’ ஒரு சுமாரான படம் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து