முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவுடன் மீண்டும் கைகோர்த்த நாசா; விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      உலகம்
NASA 2022 07-18

Source: provided

வாஷிங்டன் :  நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் கீழ், முதல் ஒருங்கிணைந்த விண்கலங்கள் செப்டம்பர் மாதம் அனுப்பப்படும். , அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையே புதிய ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

அதன்படி, இருநாடுகளும் விண்வெளி நிலைய விமானங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால், அமெரிக்கா - ரஷியா இடையேயான விண்வெளி ஆய்வுப் பணிகள் சுணக்கம் கண்ட நிலையில், பல நாட்களுக்கு பின் மீண்டும் விண்வெளி துறையில் இருதரப்பு உறவு சுமூகமாகியுள்ளது. 

நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக்கான முதல் ஒருங்கிணைந்த விண்கலங்கள் செப்டம்பர் மாதம் அனுப்பப்படும். புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சவாரி செய்ய முடியும். அதற்கு ஈடாக, ரஷிய விண்வெளி வீரர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பறக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் ரஷியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் "அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதற்கு" உதவும் என்றும், சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தின் கட்டமைப்பிற்குள், ஒத்துழைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள ரோஸ்கோஸ்மோஸ்சின் பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து, அமெரிக்க விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ, செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்டலின் ஆகியோருடன் சேர்ந்து விண்வெளி நிலையத்திற்கு ரஷிய விண்கலத்தில் செல்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். மறுமுனையில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ரஷிய விண்வெளி வீராங்கனையான அன்னா கிகினா, இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ஜப்பானிய விண்வெளி வீரருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்குச் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி நிலையத்தில் குறைந்தபட்சம் ரஷிய வீரர் ஒருவர் மற்றும் ஒரு அமெரிக்க வீரர் இருப்பது ஆய்வகத்தை இயக்குவதற்கு முக்கியமானது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து