முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: ரணில் உட்பட 4 பேர் போட்டி

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      உலகம்
Sri-Lanka 2022-07-19

Source: provided

கொழும்பு : இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

தற்போது ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக செயல்படுகிறார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயக, எஸ்.எல்.பி.பி. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகிய 4 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து