முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடுபாதையில் தார் உருகும் அளவுக்கு உச்சபட்ச வெப்பம் : லண்டனில் விமான சேவைகள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      உலகம்
sun-2022-04-29

Source: provided

லண்டன் : லண்டனில் விமான ஓடுபாதையின் தார் உருகும்அளவுக்கு உச்சபட்ச வெப்பம் நிலவியதால் லூடன் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவியது. இதையடுத்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பத்தால் மரணம் நிகழும் அபாயம் உள்ளதாக, வானிலை மையம் முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி பென்னி என்டர்ஸ்பை கூறியதாவது:-

கடந்த, 2019-ல் பிரிட்டனில், அதிகப்பட்சமாக, 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இது, தற்போது 40 டிகிரி செல்சியஸ் அளவை நெருங்கியுள்ளது. எனினும், வெப்பம் 41 டிகிரியை தாண்டாது. பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய வெப்பத்தை மக்கள் உணர உள்ளனர். இதனால் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். மக்கள், வெயில் தாக்கம் குறைவான இடங்களில் இருப்பதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

கடும் வெப்பம் காரணமாக ரயில் சேவைக்கான மின்சார கம்பிகள், சிக்னல் சாதனங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், ரயில் வேகத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசியமிருந்தால் மட்டும் ரயில் பயணம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பணி நேரத்தில் மாற்றம் செய்யலாம் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். சில பள்ளிகள், விளையாட்டு போட்டிகளை ரத்து செய்துள்ளன. சில பள்ளிகள் வெப்பத்தை தாங்கக் கூடிய குளிரும் விளையாட்டு ஆடைகளை குழந்தைகள் அணிய அறிவுறுத்தியுள்ளன.

லண்டனில் விமான ஓடுபாதையின் தார் உருகும்அளவுக்கு உச்சபட்ச வெப்பம் நிலவியதால் லூடன் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் பின் லூடன் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மோசமான வெப்பநிலையால் ஓடுபாதை பழுதடைந்த நிலையில் நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து