முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு: பிரதமர் மோடியிடம் நேரில் அழைப்பிதழ்: வழங்கிய டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி.

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
PM-2022 07 19

மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடியிடம் நேரில் அழைப்பிதழை வழங்கி டி.ஆர்.பாலு, கனிமொழி, இறையன்பு ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்க வருகின்றனர். இந்த போட்டிகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி வரை ஒதுக்கி உள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக கோலாகலமாக நடத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி சென்னை வருகிறார். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. 

ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது பிரதமர் மோடி போனில் உடல்நலம் விசாரித்தார். அப்போது செஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார். தற்போது மு.க.ஸ்டாலின் குணம் அடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 

அவரது சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் நேற்று டெல்லி சென்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினார்கள். அப்போது பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க கண்டிப்பாக சென்னை வருவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து