முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத்-க்கு எதிரான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. மேலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து