முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி உள்ளிட்ட 8 பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி ரத்து: நிர்மலா சீதாராமன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
Rice-shop 2022 07-16

சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரிசி, பருப்பு, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும், திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

இதனால் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர, ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், உணவு தானியங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் எனவும் பட்டியலிட்டுள்ளார்.  அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து