முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
Margaret-2022 07 19

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் சஞ்சய் ரெளத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து