முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வெப்ப அலை எதிரொலி: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

புதன்கிழமை, 20 ஜூலை 2022      உலகம்
sun-2022-04-29

Source: provided

லண்டன் : போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. லண்டனில் நேற்று முன்தினம் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது. 

இந்நிலையில், போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது நிலவும் வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறுகையில்,

2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகி உள்ளனர். 1757-ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பா அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து