முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கியை காப்பாற்ற பீரங்கிகளை நிறுத்திய சீனா

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      உலகம்
china-------22-07-22

Source: provided

பெய்ஜிங்: நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கியை காப்பாற்றும் நோக்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் சீன ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை நிறுத்தி உள்ளது.

சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பணத்தை எடுக்க பொதுமக்கள் யாரையும் வங்கி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்தனர். ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சீன ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை நிறுத்தி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலீட்டாளர்களிடம் இருந்து வங்கியை காக்கும் வகையில் சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக சேமிப்பு பணத்தை திரும்ப ஒப்படைக்கும் பணி நடந்து வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து