முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      இந்தியா
YOUTUBE----------22-07-22

Source: provided

புதுடெல்லி: தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தின்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப் பூர்வமான அறிக்கையைப் படித்துக் காட்டினார். அதில், இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து