முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 25-ம் தேதி இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      இந்தியா
droupathi----------22-07-22

Source: provided

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி எனும் பெருமையை அவர் பெறுகிறார்.  திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து