முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டத்தால் 2 ஆயிரம் ரெயில் சேவைகள் ரத்து பார்லி.யில் ரெயில்வே அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      இந்தியா
railway--------------22-07-22

Source: provided

புதுடெல்லி: அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை. இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. 

இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து