முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனுக்கு கொரோனா: சீன அதிபர் நலம் விசாரிப்பு

சனிக்கிழமை, 23 ஜூலை 2022      உலகம்
Xi-Jinping 2022-07-23

Source: provided

வாஷிங்டன் : கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இதுகுறித்து அதிபர் ஜோபைடன் தரப்பில், எனக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் உள்ளன. நான் நலமுடன் இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பணிகளை செய்து வருகிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார். அப்போது, நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

தைவான், உக்ரைன் மற்றும் தொழில்நுட்பத் துறை போட்டி உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன. இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு பைடன் - ஜி ஜின்பிங் இருவரும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து