முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஹா விமர்சனம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2022      சினிமா
Maha-Review 2022-07-23

Source: provided

சிம்பு, ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா ஆகியோர் நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் மஹா. கதை, போதைக்கு அடிமையான ஒரு அரக்கன் பெண் குழந்தைகளை கடத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து பின்னர் வீதியில் வீசிச் செல்கிறான். அவனைப்பிடிக்க போலீஸ் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் ஸ்ரீகாந்த். இந்நிலையில், சிலம்பரசனுக்கும், ஹன்சிகாவுக்கும் பிறந்த குழந்தையும் அந்தக் கொலைகாரனால் கடத்தப்படுகிறது. ஆனால் அந்தக் குழந்தை மீட்கப்பட்டதா இல்லையா..?  அவன் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறான் என்பதற்கான பதில் தான் மீதிக்கதை. ஹன்சிகா, இந்தப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக, குழந்தையை தொலைத்துவிட்டு ஒரு தாய் தவிக்கும் காட்சிகளில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த், தம்பி ராமையா சுஜித் ஷங்கர் ஆகியோர் நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். மீடியம் வெயிட்டில் வரும் சிம்புவின் பஞ்ச் வசங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.  இயக்குநர் ஜமீல் எடுத்துக்கொண்ட கதை களம் பழையது என்றாலும், தனது திரைக்கதை வாயிலாக சில இடங்களில் சுவாரசியமாகவும் கதையை சொல்லியிருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்து இருக்கிறது. மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் மஹா திரைப்படம் பாராட்டப்பட்டு இருக்கும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து