முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேலின் உளவாளிகளை கைது செய்து விட்டோம்: ஈரான்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022      உலகம்
Iran 2022-07-24

Source: provided

டெக்ரான் ; தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் அனைவரையும் கைது செய்து விட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட். உலகின் மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் முதன்மையானதாக மொசாட் உள்ளது. இந்த உளவு அமைப்பு ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, லெபனான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ ரகசியங்களை சேகரித்தல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. 

இந்நிலையில், தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய உளவு அமைப்பின் உளவாளிகள் அனைவரையும் கைது செய்து விட்டதாக ஈரான் நேற்று தெரிவித்துள்ளது

. ஈரானின் குர்திஷ்தான் மாகாணம் வழியாக இஸ்ரேலிய உளவாளிகள் ஈரான் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இந்த உளவாளிகளின் அனைவரையும் கைது செய்து விட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட உளவாளிகள் ஈரானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த தகவல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து