முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா: மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த காற்றாலை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022      உலகம்
America 2022-07-24

Source: provided

டெக்சாஸ் ;அமெரிக்காவில் காற்றாலை ஒன்று மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து, எரிந்து புகை பரவிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குரோவெல் நகர் அருகே பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மீது திடீரென மின்னல் தாக்கியதில், அது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதன் இறக்கையில் தீப்பிடித்த போதும், தொடர்ந்து சுழன்று கரும்புகை பரவியது. இதனை நெடுஞ்சாலை வழியே வாகனத்தில் சென்றவர்கள் தங்களது கேமிராவில் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தீப்பிடித்ததும், நிற்காமல் சுழன்றதில், ஓர் இறக்கையில் இருந்து தீ, மற்ற இறக்கைகளுக்கும் பரவியுள்ளது. அதன்பின்னர் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. குரோவெல் தீயணைப்பு துறையினருக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்களில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

இதுபற்றி தீயணைப்பு துறையின் தலைவர் பெர்ரி ஷா கூறும்போது, அதுபோன்ற தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதற்கு போதிய வசதிகள் எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். 

இதனால், தீ அதுவாகவே அணைவதற்கு தீயணைப்பு வீரர்கள் விட்டு விட்டனர். இதுபோன்ற சூழலில் தீயை அணைக்கு முயற்சிப்பது பாதுகாப்பானது அல்ல என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து