முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வராக ஷபாஸ் ஷெரீப்பின் மகன் மீண்டும் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022      உலகம்
Hamza-Shabazz 2022-07-24

Source: provided

லாகூர் ; பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததாக இம்ரான்கானின் கட்சியை(பி.டி.ஐ) சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாண முதல்வரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு சட்டசபையில் நடந்தது. 

இதில் பி.டி.ஐ. கட்சியின் சார்பில் களம் இறங்கிய சவுத்ரி பர்வேஷ் இலாஹிக்கு 186 ஓட்டுகள் கிடைத்தன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹம்சா ஷபாசுக்கு ஆதரவாக 179 பேர் ஓட்டுப்போட்டனர்

. எனினும் சவுத்ரிக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி உறுப்பினர்களின் 10 ஓட்டுகள் செல்லாது என துணை சபாநாயகர் தோஸ்த் முகம்மது மசாரி அறிவித்தார். அதை தொடர்ந்து ஹம்சா முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து