முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி எனக்கு இன்ஸ்பிரேஷன் - லெஜண்ட் சரவணன்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
Saravanan 2022 07 25

Source: provided

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது, சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் லெஜண்ட். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளனர். இப்படத்தில்  சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இதுதவிர இப்படத்தில் ராய் லட்சுமி, ரோபோ ஷங்கர், பிரபு, விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை சரவணன் தான் தயாரித்து உள்ளார். லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் துபாயில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ரஜினி, விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், குறிப்பாக சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களையும், அவரது ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன் நான். அவரைப் போல் ஸ்டைல் வந்துவிடக் கூடாது என நான் தவிர்க்க பார்ப்பேன், ஆனால் அதையும் மீறி ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து