முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபயவை கைது செய்யக்கோரி சிங்கப்பூர் அடர்னி ஜெனரலிடம் மனித உரிமை அமைப்பு புகார்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      உலகம்
Gotabhaya 2022 04

Source: provided

கோலாலம்பூர் : இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி சிங்கப்பூர் அடர்னி ஜெனரலிடம் மனித உரிமை குழு ஒன்று புகார் அளித்திருக்கிறது.

இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் ஐ.டி.ஜே.பி. என்ற இந்த அமைப்பு புகாரினை அளித்திருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு கோத்தபய இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த போது ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறி இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி எதிரொலியாக இலங்கையில் இருந்து கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பித்து வந்திருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தென்னாப்ரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐ.டி.ஜே.பி. கேட்டுக்கொண்டுள்ளது. கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி ஐ.டி.ஜே.பி. அமைப்பின் சார்பில் கடந்த 23ம் தேதி புகார் கடிதம் ஒன்று பெறப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கும் சிங்கப்பூர் அடர்னி ஜெனரல் அலுவலகம், மேலதிக விவரங்களை தர மறுத்துவிட்டது.

ஏற்கனவே கோத்தபயவுக்கு அடைக்கலம் தர மறுத்ததுடன் 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தபயவை கைது செய்யக்கோரி சிங்கப்பூர் அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே தற்போது சிங்கப்பூரில் உள்ள கோத்தபய, அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி அரேபியாவில் தஞ்சமடைய  தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து