முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்றால் நிச்சயம் மரணம்: கடலுக்கு அடியில் ஆபத்து நிறைந்த பகுதியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      உலகம்
Scientists 2022 07 25

Source: provided

வாஷிங்டன் : கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் அதிசய பகுதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியில் நீந்தி செல்லும் எந்த உயிரினமும் உயிரிழக்கும் என தெரியவந்துள்ளது. 

உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் உப்புத்தன்மை அதிகம் நிறைந்தது செங்கடல். இக்கடல் மத்திய கிழக்கு நாடுகள் - ஆப்ரிக்கா இடையே அமைந்துள்ளது. இது மத்திய தரைக்கடலை இணைக்கும் கடலாகவும் உள்ளது. 

இந்நிலையில், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடி ஆழத்தில் பயணிக்க வைத்த விஞ்ஞானிகள் 10 மணி நேரம் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதி சில நிமிடங்களின் போது கடலுக்கு அடியில் 1.1 கிலோமீட்டர் அடி ஆளத்தில் 1 லட்சம் சதுர பரப்பளவில் வித்தியாசமான இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

அந்த பகுதியில் ஆக்சிஜன் வாயு கிடையாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பகுதி முழுவதும் அதிக அளவிலான உப்புத்தன்மை கொண்டுள்ளது. கடலின் மற்ற பகுதியில் உள்ள உப்பின் அளவை விட 3 முதல் 8 மடங்கு இந்த பகுதியில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதி முழுவதும் ஷைட்ரஜன் சல்பைட் என்ற விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருப்பதும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

மேலும், இந்த பகுதிக்குள் மீன்கள் உள்பட உயிருடன் செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள நீரில் முழுவதும் விஷத்தன்மை கொண்ட கொடிய வேதிப்பொருள் கலந்துள்ளதால் அங்கு நுழையும் உயிரிழனங்கள் நிச்சயம் உயிரிழந்துவிடும் அல்லது அங்கு நுழையும் உயிரிழங்கள் உடனடியாக மயக்கமடைந்து உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் மரணத்தை ஏற்படுத்தும் அதிசயமும் ஆபத்தும் நிறைந்த பகுதியை கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிகழ்வு கடல்சார் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற மேலும் சில பகுதிகளை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து