முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 3-வது நாளாக ஆஜர்: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்தது

புதன்கிழமை, 27 ஜூலை 2022      இந்தியா
Sonia 2022 07 26

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவிடம் 3ம் நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளான நேற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜரானார்.

ஜூலை 22ம் தேதியன்று முதன்முதலாக ஆஜரான நிலையில், அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின் நேற்று முன்தினமும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து மீண்டும் சோனியா காந்தி ஆஜரானார். நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2 நாட்களாக சோனியாவிடம் 9 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜராகும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து 3வது நாளாக நேற்று ஆஜரான சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து