முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 10-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: மேலும் 3 லோக்சபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் துணைத்தலைவர் ஹரிவில் நாராயணசிங் உத்தரவு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      இந்தியா
Parlimant 2022 07 26

Source: provided

புதுடெல்லி: 10-வது நாளாக நேற்றும் பதாகைகளை ஏந்தி அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேலும் மூன்று லோக்சபா எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து துணைத்தலைவர் ஹரிவில் நாராயணசிங் உத்தரவிட்டார். இதன்மூலம் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

12-ம் தேதி வரை...

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாராளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

23 பேர் சஸ்பெண்ட்...

இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம், அக்னிபாதை திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதால் அவைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட சுமார் 23 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

நேற்றும் அமளி...

இந்நிலையில் 10-ம் நாளான நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை நேற்று காலை துவங்கியவுடன் அவையில் அமளி ஏற்பட்டது. எதிர் காட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, எம்.பி.கள் மீதான தக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதற்கான உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுப்பட்டனர். 

ஒத்திவைப்பு...

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு குறித்த காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன்  சௌத்ரியின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். இதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவை கூடிய பிறகும் மீண்டும் இதே பிரச்சனைகளை முன்வைத்து ஆளும் கட்சி ஒருபுறமும், எதிர் கட்சி ஒருபுறமும் அமளியில் ஈடுப்பட்டனர்.

3 உறுப்பினர்கள்...

அவையின் மைய பகுதிக்கு சென்று அவை தலைவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பிய 3 மாநிலங்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளிதரன் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், குறிப்பாக சுசில்குமார், குப்தா சந்தீப்குமார், சுயேச்சை உறிப்பனரான அஜித்குமார் போன் என்ற உறுப்பினர்களையும் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவில் நாராயணசிங் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

தர்ணாவில் ஈடுபட்ட....

விதி எண் 256ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 20 எம்.பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மொத்தம் 23 உறுப்பினர்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கும் மற்றும் மக்களவையும் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் பாராளுமன்றத்தில் வெளியில் உள்ள காந்திசிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து