முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவாக தீர்ப்பளித்ததால் சஸ்பெண்டா? பீகார் மாவட்ட நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் மனு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி: நாடு முழுவதும் சுமார் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவாக தீர்ப்பளித்ததால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார் பீகார் மாவட்ட நீதிபதி ஒருவர்.

மின்னல் வேகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பளித்து, மிக விரைவாக பதவி உயர்வு கோரும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் கூறி பாட்னா உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மாவட்ட நீதிபதி எஸ்.கே. ராய் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆகியோர், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு ஏற்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தனர்.

அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும், இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இனறு விசாரணைப்பதாக சுப்ரீம் கோர்ட்ம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து