முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு அம்மை பரவல் தீவிரம்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அவசரநிலை பிரகடனம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022      உலகம்
Monkey-Measles 2022 07 29

Source: provided

வாஷிங்டன் : குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வெடித்து கிளம்பிய குரங்கு அம்மை நோய் தற்போது வரை 78 நாடுகளில் தீவிரமாக பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 4,600 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக காலிபோர்னியா மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 800 பேர் குரங்கு அம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் மட்டும் 261 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியாக சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், போதுமான தடுப்பூசிகளை பிடன் அரசு விநியோகிக்கவில்லை என்றும் சான் பிரான்சிஸ்கோ நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து