முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் வெப்ப அலை : ஆய்வறிக்கையில் தகவல்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      உலகம்
London 2022 07-30

Source: provided

லண்டன் : பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதாக சர்வதேச நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20-ம் தேதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. 

இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19-ம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்ப நிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு செய்தது. 

அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதா்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து