முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      உலகம்
Afghanistan 2022 07-30

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி வந்த தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு எதிரான அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்நாட்டில் தற்போது டி20 லீக் என்னும்  உள்ளூர் அணிகளுக்கான ஷ்பகீசா டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் பெண்ட் - இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் போது தான் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதும் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

இந்த வெடிகுண்டு தாக்குதலில் ரசிகர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போட்டியை நடத்தும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதலை அடுத்து காபூல் நகரம் முழுவதும் தலிபான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து