முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      உலகம்
Electricity-bill 2022 07-30

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான்  தேசிய மின் நுகர்வு கழகம் மின்கட்டணத்தின் அடிப்படை விலையை ஒரு யூனிட்டுக்கு  7.9 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் கடந்த 28-ம் தேதி மின் கட்டண உயர்வை அதிகரித்தது. நாடு பொருளாதர நெருக்கடியை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த முன்மொழிந்தது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் வாங்கும் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 

28,000 மெகாவாட் தேவை இருக்கும் பொழுது பாகிஸ்தானில் 22,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இன்னும் 6,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களில் 6 மணி நேரமும் கிராமங்களில் 8 மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய மின் கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் முதல் 3 மாதங்களுக்கு வரை அமலாகும் என கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து