முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்த அஜித்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Ajith 2022 07-30

Source: provided

திருச்சி : திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் பெறுள்ள பதக்க பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெற்ற 47-வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதற்காக திருச்சி வந்த அஜித் குமார் ரசிகர்களை சந்தித்தார்.   அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. நடிகர் அஜித் 10 மீ, 25 மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார்.

இந்த நிலையில் அவர் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து