முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் அருகே போா் ஒத்திகை நடத்திய சீனா

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      உலகம்
China 2022 07-31

Source: provided

பெய்ஜிங் : சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அருகே போா் ஒத்திகையில் ஈடுபட்டதாக சீனா அறிவித்துள்ளது.

அந்த நாடு தனது அங்கமாகக் கருதி வரும் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செல்லக் கூடும் என்று தகவல் வெளியாகி பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளதாவது:-

பூஜியன் மாகாணத்தையொட்டிய பிங்டன் தீவில் சீன ராணுவம் போா் ஒத்திகையில் ஈடுபட்டது. காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த போா் ஒத்திகையில், உண்மையான குண்டுகளும் வெடிபொருள்களும் பயன்படுத்தப்பட்டன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  எனினும், அந்த போா் ஒத்திகையில் ஏவுகணைகள், போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டனவா என்பது குறித்து தகவல் இல்லை. 

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்களது அங்கமாகவே தற்போதும் சீனா கருதி வருகிறது. தைவானை சீனாவுடன் இணைத்துக் கொள்ள தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், நான்சி பெலோசி அந்தத் தீவுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது.  இதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்தச் சூழலில், தைவானுக்கு அருகே சீனா தற்போது போா் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து