முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு: செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவு இன்று முதல் அமலுக்கு வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
School-Education 2022 02 11

டி.என்.எஸ்.இ.டி. (TNSED)  செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான செயலி வருகைப்பதிவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்புக் கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூா்வமாக தங்கள் உயா் அலுவலா்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர். 

அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியா்களுக்கு சிரமங்களும் கால விரயமும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மே 25-ம் தேதி ஆசிரியா்கள் தங்களது கைபேசியில் உள்ள பள்ளிக் கல்வித் துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இந்த இணையச் செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியா்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் செயலியை டி.என்.எஸ்.இ.டி.(TNSED) கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பள்ளி ஆசிரியா்கள் பயன்படுத்துமாறு மாவட்ட கல்வித் துறை சாா்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களின் வருகையை இன்று முதல் செயலியில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன. தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து