முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வரும் 7-ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Ma Subramanian 2022 07 31

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி, சென்னையில் வருகிற 7-ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான இறுதி பதிவை நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி (ஆக. 7-ம் தேதி), கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த மாரத்தான் போட்டிக்கான இறுதி பதிவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இந்தாண்டு கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டிவரும் 7-ம் தேதி நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். 

40 ஆயிரம் பேர் வரை இப்போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இப்போட்டியும் ஆசிய சாதனை படைக்க இருக்கிறது. போட்டியில் 42 கி.மீ. மற்றும் 21.1 கி.மீ. பிரிவுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. ஒரு லட்சம், 2-ம் பரிசு 50 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.25 ஆயிரமாகும். 10 கி.மீ. பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50 ஆயிரம், 2-ம் பரிசு 25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். 5 கி.மீ., பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு 10 ஆயிரமாகும். பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்,  7-ம் தேதி வழங்குகிறார். இப்போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை சென்று திரும்ப இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து