முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் நிர்வாக குளறுபடியை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உண்டு : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RBU 2022-08-01

Source: provided

சென்னை : அரசின் நிர்வாக குளறுபடியை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உண்டு என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், தமிழகத்திற்கு வரவேண்டிய வேதாந்தா, பாக்ஸ்கான் நிறுவனங்களின் இரண்டு லட்சம் கோடி முதலீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுள்ளன, இதன் மூலம் 2 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை நாம் இழந்தோம், என்று திமுக நிர்வாக குளறுபடிகளை சுட்டிக்காட்டி விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள  தொழில்துறை அமைச்சர், தெளிவான விளக்கத்தை சொல்லாமல்,  குழப்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். குறிப்பாக அவர் அறிக்கையில் வேதாந்த நிறுவனத்திற்கு சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணங்களுக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான இசைவினை வழங்க மறுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாக்ஸ்கான் நிறுவனம் மின் வாகனஉற்பத்தி மற்றும் செமி கண்டக்டர்  புனரமைப்பு உற்பத்தி திட்டங்களை, தமிழ்நாட்டில் நிறுவ பரிசீலிப்பதாக அந்த நிறுவனம் கூறுவதாக கூறியுள்ளார். இதன் மூலம் தொழில் தொடங்கவில்லை என்பது தானே உண்மை நிலையாகும்.

அரசின் அலட்சியங்களை தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் எதிர்கட்சி தலைவரின் தார்மீக உரிமைமையாகும், இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் நிர்வாகம் தெரியவில்லை என்று ஏளனமாகவும்,ஏகடியமாகவும் பேசி உள்ளார். 

வேதாந்த, பாக்ஸ்கான் நிறுவனம் தொழில் தொடங்க முன்வரவில்லை என்பதை நடுநிலை நாளிதழ்கள் செய்தியாக மற்றும் கட்டுரையாக வெளியிட்டு உள்ளன. அமைச்சரும் இதை படித்திருப்பார் இது தமிழகம் முழுவதும் விவாத பொருளாக இருப்பததை சுட்டிக்காட்டி தனது தார்மீக கடமையாற்றி உள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் பதிலுக்கு உரிய விளக்கம் தராமல், சர்வாதிகாரபோக்குடன் ஜனநாயகத்துக்கு விரோதமாக பதில் அளித்துள்ளார் தொழில்துறை அமைச்சர்.

48 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி ,சாமானிய முதல்வராய் கடந்த நான்கரை ஆண்டு காலம் சரித்திர சாதனை படைத்து, 40 ஆண்டுகளான திட்டங்களை உருவாக்கி, மாணவர்கள், விவசாயிகள், தாய்மார்கள், தொழிலாளர்கள் என பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் போற்றும் தலைவராக எடப்பாடியார் உள்ளார்.

மக்களின் கோரிக்கைகளையும், தமிழக அரசின் அவலங்களை அரசின் கவனத்திற்கு தார்மீக அடிப்படையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கொண்டு வருகிறார், அதற்கு முதலமைச்சர்  பதில் கூற நேரம் ஒதுக்குவதில்லை, கேள்வி கேட்க சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருக்கு உரிமை உள்ளது. அதற்கு முதல்அமைச்சரும், அமைச்சர்களும் பதில் கூற தார்மீக முறையில் சொல்லவது தான் அரசியல் நாகரிகம் ஆகும். ஆளும் கட்சியாக உங்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான், எங்களையும் மக்கள் பணியாற்றுவதற்கு எதிர்கட்சியாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து